Loading...

Empowering Small and Marginal Farmers - Contribute Now

1) முட்டை ரசம் – இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல் படுகிறது. . செய்முறை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைக்கவும். அந்த முட்டைகள் மூழ்கும் அளவிற்கு எலுமிச்சை சாற்றினை விடவும். இருநூறு கிராம் வெல்லத்தை எடுத்துக்கொண்டு கெட்டியாக தண்ணீரில் கலந்து கொள்ளவும். அதனை முட்டை உள்ள பாத்திரத்தில் மெதுவாக ஊற்றி மூடி வைக்கவும். பத்து நாட்கள் கழித்து திறந்து பார்க்கவும்/ முட்டை கூழ் வடிவில் மாறி இருக்கும். அதனை கையால் நன்றாக பிசையவும் பின்னர், வெல்லக்கரைசலை (இருநூறு கிராம் கொண்டது) அதனுடன் ஊற்றி மீண்டும் பத்து நாட்கள் மூடி வைக்கவும் அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.

2) மீன் அமினோ கரைசல் உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும் 21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும் 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம். இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

3) பழக்காடி கரைசல் தேவையான பொருட்கள்: சாணம்-20 கிலோ, கெட்டுப்போன பழங்களின் கூழ் – 5 முதல் 10 கிலோ தொல்லுயிர் கரைசல் – 50 கிலோ தண்ணீர்-50 லிட்டர் ஜீவாமிர்தம் – 5 – 10 லிட்டர் தேமோர் (அ) அரப்புமோர் – 5 – 10 லிட்டர் இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும் இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

4) தேமோர் கரைசல் புளித்த மோர் – 5 லி இளநீர் – 1 லி இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும். தெளிப்பு முறை 1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

5) அரப்பு மோர் கரைசல் (ஜிப்ராலிக் ஆசிடுக்கு பதிலாக) பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் என்ற பயிர் ஊக்கியை பிராந்தி கலந்து கரைத்து பூச்சி மருந்துகளுடன் கலந்து அடிக்கிறார்கள். இதற்கு பதில், இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம். அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும். ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்.

6) Archae பாக்டீரியா கரைசல் 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார். 200 லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் – 1 ஏக்கர் 10 லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம் archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும். இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

7) நீம் அஸ்திரா நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர் வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.

8) சுக்கு அஸ்திரா சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

9) பிரம்மாஸ்திரம் நொச்சி இலை 10 கிலோ வேப்பம் இலை 3 கிலோ புளியம் இலை 2 கிலோ இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது

10) அக்னி அஸ்திரம் கோமியம் 20 கிலோ புகையிலை 1 கிலோ பச்சை மிளகாய் 2 கிலோ வெள்ளைப்பூண்டு 1 கிலோ வேப்பிலை 5 கிலோ இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்.) வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.

11) ஜீவாமிர்தம் தண்ணீர் – 200 லிட்டர் பசுஞ்சாணி நாட்டுமாடு – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் வெல்லம் – 2 கிலோ சிறுதானியங்கள் – 2 கிலோ (பவுடராக அல்லது முளைக்கட்டச்செய்து அரைக்கப்பட்டதாக இருப்பது அவசியம்) இவற்றுடன் ஒரு கைப்பிடி அளவு நல்ல ஜீவன் உள்ள மண். இவற்றை தொட்டியில் விட்டு கலக்க வேண்டும். தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விட வேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிர்கள் உள்ளது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இவை இரட்டிப்பு அடைகின்றன. இப்பெருக்கத்தினை கணிணியாலும் கணக்கிட முடியாது. இந்த நுண்ணுயிர் கரைசல்தான் ஜீவாமிர்தம் இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்த கரைசலை வயலில் விடும் பொழுது 15 அடி ஆழத்தில் சமாதி நிலையிலிருக்கும் மண்புழுக்கள் துள்ளி எழுந்து மண்ணைக்கிளறிக் கொண்டு மேலே வந்து விடும். மண் வளமாகும்

12) பீஜாமிர்தம் தண்ணீர் 20 லிட்டர் பசு மாட்டு சாணி 5 கிலோ கோமியம் 5 லிட்டர் சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் மண் ஒரு கைப்பிடி அளவு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும். பயன்கள் : வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.

13) வேம்பு புங்கன் கரைசல் தேவையான பொருட்கள் :- வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர் கோமியம் (பழையது) பத்து லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி

14) பல்வகை பயிர் தொழில் நுட்பம் தானியப்பயிர் 4 சோளம் 1 கிலோ கம்பு 1/2 கிலோ தினை 1/4 கிலோ சாமை 1/4 கிலோ பயிறு வகை 4 உளுந்து 1 கிலோ பாசிப்பயறு 1 கிலோ தட்டைப்பயிறு 1 கிலோ கொண்டைக்கடலை 1 கிலோ எண்ணை வித்துக்கள் 4 எள் 1/2 கிலோ கடலை 2 கிலோ சூரியகாந்தி 2 கிலோ ஆமணக்கு 2 கிலோ பசுந்தாள் பயிர்கள் 4 தக்கை பூண்டு 2 கிலோ சணப்பை 2 கிலோ நரிப்பயறு 1/2 கிலோ கொள்ளு 1 கிலோ மணப்பயிர்கள் 4 கடுகு 1/2 கிலோ வெந்தயம் 1/4 சீரகம் 1/4 கிலோ கொத்தமல்லி 1 கிலோ இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.